இலவச தையல் எந்திரங்களை பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம்

இலவச தையல் எந்திரங்களை பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-09-14 19:15 GMT

பெரம்பலூர் மாவட்ட சமூகநல அலுவலகத்தின் மூலம் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் எந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் கைம்பெண்கள் (விதவை), ஆதரவற்ற கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்ற பெண்கள் ஆகியோருக்கு இலவச தையல் எந்திரம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயன்பெற தகுதியான நபர்கள் விண்ணப்பங்களை அரசு இ-சேவை மையங்கள் மூலம் இணையதள வழியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்கள் வருமான சான்று, வயது வரம்பு 20 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். கைம்பெண்கள் விதவை சான்று, கணவரால் கைவிடப்பட்டவராயின் அதற்கான சான்று, தையல் பயிற்சி சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் -2, சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை ஆகிய சான்றுகளுடன் அரசு இ-சேவை மையங்களில், இணையதள வழியில் விண்ணப்பிக்கலாம். ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். வயது சான்றுக்கு கல்விச்சான்று அல்லது பிறப்பு சான்றை பயன்படுத்தலாம். குறைந்தது 6 மாத கால தையல் பயிற்சி முடித்திருக்க வேண்டும், என்று மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்