பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் ஆவாரங்காடு பகுதியில் உள்ள திருமண மண்டபம் பின்புறம் காவிரி ஆற்றில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் உடல் மிதந்து வந்தது. பின்னர் அந்த உடல் கரை ஒதுங்கியது. இதனை பார்த்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஆனால் அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் போன்ற விவரங்கள் தெரியவில்லை. இதையடுத்து போலீசார் பெண்ணின் உடலை மீட்டு பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து அவர் யார்?, தண்ணீரில் மூழ்கி இறந்தாரா? அல்லது ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் பெண் பிணம் கடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.