அரூர்:
அரூர் அருகே தீர்த்தமலை செல்லும் சாலையில் பொய்யப்பட்டி கீழனூர் காப்புக்காட்டில் 40 வயது மதிக்கத்தக்க பெண் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அரூர் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஆனால் பிணமாக கிடந்த பெண் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை. இதையடுத்து அந்த பெண்ணின் உடலை கைப்பற்றிய போலீசார், தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து, அந்த பெண் காப்புக்காட்டுக்கு வந்தது எப்படி?, கொலை செய்யப்பட்டாரா? என தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.