நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

நகராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.;

Update: 2023-07-18 20:41 GMT

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 36-வது வார்டு சுப்புராஜ் நகர் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் நகராட்சி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று வினியோகம் செய்யப்பட்ட குடிநீர் கலங்கலாகவும், உப்பு நீராக இருப்பதாகவும் கூறி சுப்புராஜ் நகர் பகுதியை சேர்ந்த பெண்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் நகராட்சி ஆணையாளர் அசோக்குமாரை நேரில் சந்தித்து நகராட்சி மூலம் வினியோகம் செய்யப்படும் குடிநீர் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும், இதனால் குழந்தைகள், முதியவர்கள் பாதிக்கப்படுவதாகவும், தேவைக்காக குடிதண்ணீரை வெளியே தினமும் விலை கொடுத்து வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். எங்களின் நிலை அறிந்து தங்களுக்கு நல்ல தரமான குடிநீர் வழங்கவும், இரவு நேரத்தில் குடிநீர் வினியோகம் செய்யாமல் பகல் நேரத்தில் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட ஆணையாளர் அசோக் குமார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்