பெண்ணுக்கு கொலைமிரட்டல்; அக்காள்-தங்கைக்கு வலைவீச்சு

பெண்ணுக்கு கொலைமிரட்டல் விடுத்த அக்காள்-தங்கையை போலீசார் வலைவீசு தேடிவருகிறார்கள்.

Update: 2022-10-15 19:58 GMT

களக்காடு:

களக்காடு அருகே சீவலப்பேரி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவர் அப்பகுதியில் ஓட்டல் வைத்துள்ளார். இவருடைய மனைவி ராஜம்மாள் (50). இவர்கள் அதே தெருவைச் சேர்ந்த ராணி என்பவரது வீட்டின் முன்புள்ள பொதுப்பாதை வழியாக தங்களது வீட்டிற்கு சென்று வருவது வழக்கம்.

இந்த பொதுப்பாதையை பயன்படுத்துவது தொடர்பாக முத்துப்பாண்டிக்கும், ராணியின் தங்கை ராஜலட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது. சம்பவத்தன்று இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதுகுறித்து முத்துப்பாண்டி குடும்பத்தினர் களக்காடு போலீசில் புகார் அளித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜலட்சுமி, ராணி ஆகிய 2 பேரும் முத்துப்பாண்டியின் மோட்டார் சைக்கிளை உடைத்து சேதப்படுத்தினர். இதனை தட்டி கேட்ட ராஜம்மாளுக்கு கொலைமிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான ராஜலட்சுமி, ராணி ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்