திருமணமான 6 மாதங்களில் தீக்குளித்து பெண் தற்கொலை

கொள்ளிடம் அருகே திருமணமான 6 மாதங்களில் தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-08-24 17:15 GMT

கொள்ளிடம்;

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள மேலமாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்தி(வயது30). கொத்தனாரான இவருக்கும்பூம்புகார் கரைமேடு கிராமத்தைச் சேர்ந்த மோகனசுந்தரம் மகள் தர்ஷிகா (24) என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் சீர்காழியில் திருமணம் நடந்தது. இந்தநிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதி மேலமாத்தூரில் உள்ள கார்த்தி வீட்டில் தர்ஷிகா மணமடைந்து உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதில் உடல் முழுவதும் தீக்காயமடைந்த தர்ஷிகா சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு தர்ஷிகா சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.இது குறித்து தர்ஷிகாவின் தந்தை மோகனசுந்தரம் கொள்ளிடம் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தர்ஷிகாவுக்கு திருமணமாகி 6 மாதங்களே ஆவதால் உதவி கலெக்டர் அர்ச்சனா விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்