விஷம் தின்று பெண் தற்கொலை

பேராவூரணி அருகே விஷம் தின்று பெண் தற்கொலை செய்து ெகாண்டார்.

Update: 2023-08-02 19:44 GMT

பேராவூரணி;

பேராவூரணி அருகே உள்ள நாட்டாணிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் நீலகண்டன்(வயது35). இவருடைய மனைவி திவ்யா(27). இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளான். சம்பவத்தன்று கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் தென்னை மரத்துக்கு கட்டுவதற்காக வைத்திருந்த விஷ மருந்தை திவ்யா தின்று மயங்கி விழுந்தார். இதனால் அவரை சிகிச்சைக்காக பேராவூரணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி திவ்யா நேற்று இறந்தார். இதுகுறித்து திவ்யாவின் தாய் சுமதி பேராவூரணி போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்