சாராயம் விற்ற பெண் கைது
குடியாத்தம் அருகே சாராயம் விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.
குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம், சப்- இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் உள்ளிட்ட போலீசார் குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமப்புற பகுதிகளில் சாராய சோதனை நடத்தி வருகின்றனர். குடியாத்தம் அடுத்த சேங்குன்றம் பகுதியில் திடீர் சோதனை நடத்தினர் அப்போது அங்கு வீட்டின் அருகே வைத்து சாராயம் விற்றுக் கொண்டிருந்த ரேவதி (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 30 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர்.