நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்- இன்ஸ்பெக்டர் சுபாஷினி மற்றும் போலீசார் நேற்று நாட்டறம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புதுப்பேட்டை அருகே கள்ளச்சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த அதேப்பகுதியை சேர்ந்த கண்ணையன் மனைவி சத்யா (வயது 60) என்பவரை கைது செய்தனர். இவரிடமிருந்து 10 பாக்கெட் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.