சாராயம் விற்ற பெண் கைது

கீழ்வேளூர் அருகே சாராயம் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-02-07 18:45 GMT

சிக்கல்:

கீழ்வேளூர் போலீஸ் சரகம் ராதாமங்கலம் ஊராட்சி தெற்காலத்தூர் பகுதியில் கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தெற்காலத்தூர் மெயின் ரோட்டில் சாராயம் விற்ற நாகை வெளிப்பாளையம் தாமரைக்குளம் மேல்கரையை சேர்ந்த அன்பு மனைவி உதயராணி (வயது38) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்