சாராயம் விற்ற பெண் கைது

திருவிழந்தூர் பகுதியில் சாராயம் விற்ற பெண் கைது செய்யப்பட்டார்

Update: 2023-01-02 18:45 GMT

மயிலாடுதுறை திருவிழந்தூர் கழுக்காணிமுட்டம் பகுதியில் சாராய விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு சாராய விற்ற பெண் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர், கழுக்காணிமுட்டம் புது காலனி தெருவை சேர்ந்த தமிழ்மணி மனைவி சுமத்திரா (வயது 27) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுமத்திராவை கைது செய்து அவரிடம் இருந்து 60 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்