பொன்னை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட கீரைசாத்து மலை அடிவாரத்தில் பொன்னை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கீரைசாத்து மலைப்பகுதியில் சாராயம் விற்ற ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சுதா (வயது 38) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 15 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.