சாராயம் விற்ற பெண் கைது
கீழ்வேளூர் அருகே சாராயம் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
சிக்கல்:
கீழ்வேளூர் போலீஸ் சரகம் காக்கழனி ஊராட்சி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காக்கழனி ஆற்று பாலம் அருகில் சாராயம் விற்பனையில் ஈடுபட்ட ஒரு பெண்ணை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் காக்கழனி தோப்பு தெருவை சேர்ந்த துரைசாமி மனைவி சாவித்திரி (வயது58)என்பது தெரிய வந்தது. இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாவித்திரியை கைது செய்து அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.