பெண்ணிடம் பணப்பை பறிப்பு
சாயல்குடி அருகே பெண்ணிடம் பணப்பை பறிக்கப்பட்டது.
சாயல்குடி,
சாயல்குடி அருகே பெரியகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவருடைய மனைவி ராஜாமணி (வயது 49). இவர் சாயல்குடி பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது கையில் வைத்திருந்த பையை கீழே வைத்தார். பையில் ரூ.10 ஆயிரமும், ஏ.டி.எம்.கார்டும் இருந்து உள்ளது. இந்த நிலையில் மர்ம ஆசாமி அந்த பையை நைசாக திருடி சென்று விட்டார். பின்னர் ஏ.டி.எம்.கார்டில் இருந்த பின் நம்பரை பயன்படுத்தி ஏ.டி.எம். மையத்தில் அந்த ஆசாமி ரூ.5 ஆயிரத்தை எடுத்து உள்ளார்.