பெண்ணிடம் 3½ பவுன் நகை பறிப்பு
மதுரையில் பெண்ணிடம் 3½ பவுன் நகை பறித்து சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
புதூர்,
மதுரை ராஜ கம்பீரம், ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் பாரதி கண்ணன். இவருடைய மனைவி சுசித்ரா (வயது 32). இவர் சம்பவத்தன்று மதியம் தனது மகனுடன் ேமாட்டார் சைக்கிளில் சென்றார். அம்மாபட்டி அருகே சென்ற போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் திடீரென்று சுசித்ரா கழுத்தில் அணிந்திருந்த 3½ பவுன் நகையை பறித்து விட்டு தப்பி சென்று விட்டனர். இது குறித்து ஒத்தக்கடை போலீசில் அவர் புகார் செய்தார். இதன் பேரில் ஒத்தக்கடை போலீசார் வழக்குபதிவு செய்து நகையை பறித்து சென்ற ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.