பெண்ணிடம் 2 பவுன் நகை பறிப்பு
பெண்ணிடம் 2 பவுன் நகை பறித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்
மேலூர்,
மேலூரில் உள்ள வெள்ளநாதன்பட்டியை சேர்ந்தவர் பழனிக்குமார். இவரது மனைவி மகாலட்சுமி (வயது 23). இவர்கள் இருவரும் உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு நாவினிப்பட்டி அருகே நான்கு வழி சாலையில் வந்துள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த சுமார் 23 வயதுடைய 3 வாலிபர்கள் மகாலட்சுமி அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி விட்டனர்.இதுகுறித்து மேலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தஜோதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.