ஆத்தூர் அருகே கம்மங்கூழ் விற்ற பெண்ணிடம் 2 பவுன் நகை பறிப்பு

ஆத்தூர் அருகே கம்மங்கூழ் விற்ற பெண்ணிடம் 2 பவுன் நகையை பறித்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2022-09-22 20:43 GMT

ஆத்தூர், 

கம்மங்கூழ் விற்ற பெண்

ஆத்தூர் அருகே உள்ள வளையமாதேவி கிராமத்தை சேர்ந்தவர் அமராவதி (வயது 54). இவர் ஆத்தூர் அருகே மஞ்சினி செல்லும் சாலையில் உள்ள முதியோர் இல்லத்தின் முன்பு தள்ளுவண்டியில் கம்மங்கூழ் வியாபாரம் செய்து வந்தார்.

நேற்று முன்தினம் மதியம் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் அமராவதியிடம் கம்மங்கூழ் பணம் கொடுத்து வாங்கி குடித்தார். இதையடுத்து களைப்பாக இருப்பதாக கூறி அங்கிருந்த சேரில் அமர்ந்தார்.

நகைபறிப்பு

பின்னர் சாலையில் யாரும் நடமாட்டம் இல்லை என்று பார்த்த பிறகு அமராவதியின் கழுத்தில் இருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றார்.

இதை தடுக்க முயன்ற அமராவதியை தாக்கி விட்டு நகையை பறித்துக்கொண்டு அந்த மர்ம நபர் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்.

இந்த சம்பவம் குறித்து அமராவதி ஆத்தூர் புறநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற வாலிபரை வலைவீசி தேடி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்