பெண் மாயம்

பெண் மாயமானார்.

Update: 2022-09-16 19:11 GMT

பெட்டவாய்த்தலை பழங்காவேரி பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 26). இவரது மனைவி பிரபா தேவி ( 24). இவர் தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இவர்களுக்கு திருமணம் முடிந்து 4 ஆண்டுகள் ஆகிறது. நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற பிரபாதேவி வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் பெட்டவாய்த்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்