பெண் மாயம்

பெண் மாயம் ஆனார்.;

Update: 2023-08-12 18:37 GMT

குளித்தலை அருகே இரும்பூதிபட்டி பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர் கோகுலன். இவரது மனைவி லிமோனிஷா (24). இந்தநிலையில் லிமோனிஷா சம்பவத்தன்று குளித்தலை அரசு மருத்துவமனைக்கு சென்று விட்டு வருவதாக தனது வீட்டில் உள்ளவர்களிடம் கூறிச் சென்றுள்ளார். ஆனால் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லையாம். இதையடுத்து பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து கோகுலன் கொடுத்த புகாரின்பேரில், குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து, மாயமான லிமோனிஷாவை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்