மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி

Update: 2023-02-10 19:30 GMT

மேச்சேரி:-

மேச்சேரி அருகே மல்லிகுந்தம் பகுதியை சேர்ந்தவர் காத்தமுத்து. இவருடைய மனைவி கவிதா (வயது 39). இவர் நேற்று காலை மல்லிகுந்தம் கூனாண்டியூர் சாலையில் ஜீவா நகர் அருகே நடந்து சென்று ெகாண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக கவிதா மீது மோதியது. இதில் தலையில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்