மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி

தக்கலை அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலியானார். இதுதொடர்பாக காண்டிராக்டர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-08-22 18:45 GMT

தக்கலை:

தக்கலை அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலியானார். இதுதொடர்பாக காண்டிராக்டர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோட்டார் சைக்கிள் மோதியது

தக்கலை அருகே உள்ள முட்டைக்காடு சாமிபாறவிளையை சேர்ந்தவர் மேரி கில்டா (வயது64). இவர் வீட்டுவேலை செய்து வந்தார். இவருடைய கணவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். சித்ரா (34) என்ற மகள் உள்ளார். இவருக்கும் திருமணம் முடிந்து கணவர், பிள்ளைகளுடன் தாயார் மேரி கில்டா வீட்டில் வசித்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மேரி கில்டா பத்மநாபபுரத்தில் உள்ள கடையில் பொருட்கள் வாங்கிவிட்டு மீண்டும் வீட்டிற்கு சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். மணபாறை பகுதியில் சென்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது.

பெண் பலி

இதில் மேரி கில்டா மற்றும் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த அனிஷ்(31) ஆகிய 2 பேரும் பலத்த காயமடைந்தனர். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த குமாரபுரம் மிக்கேல் நகரை சேர்ந்த காண்டிராக்டரான ஸ்டேன்லி ஸ்டீபனுக்கு (42) லேசான காயம் ஏற்பட்டது.

இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து படுகாயமடைந்த மேரி கில்டா, அனிஷ் ஆகிய 2 பேரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் இவருவரையும் டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது, மேரிகில்டா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து மேரி கில்டாவின் மகள் சித்ரா (34) கொடுத்த புகாரின்பேரில் விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த ஸ்டேன்லி ஸ்டீபன் மீது தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்