2 தனியார் பஸ்கள் மோதி பெண் பலி
4 வழிச்சாலையில் போட்டி போட்டு வந்த 2 தனியார் பஸ்கள் மோதி பெண் பலியானார்.
கிணத்துக்கடவு
4 வழிச்சாலையில் போட்டி போட்டு வந்த 2 தனியார் பஸ்கள் மோதி பெண் பலியானார். அவருடைய மகன் படுகாயம் அடைந்தார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தனியார் பஸ்கள்
கிணத்துக்கடவு அருகே கோதவாடியை சேர்ந்தவர் சிவலிங்கம். இவருடைய மனைவி அங்காத்தாள் (வயது 55). இவர்களுடைய மகன் முனியப்பன் (35). மனநலம் பாதிக்கப்பட்டவர்.
இந்த நிலையில் நேற்று அங்காத்தாள், தனது மகன் முனியப்பனு டன் கோவை-பொள்ளாச்சி 4 வழிச்சாலை சென்றாம்பாளையம் பிரிவு பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது கோவையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி 2 தனியார் பஸ்கள் ஒன்றன்பின் ஒன்றாக போட்டி போட்டபடி வேகமாக வந்து கொண்டு இருந்தன.
பெண் பலி
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்காத்தாள், முனியப்பன் ஆகியோர் விலகிச் செல்ல முயன்றனர். ஆனால் அதற்குள் அந்த தனியார் பஸ் அவர்கள் 2 பேர் மீதும் வேகமாக ேமாதியது. இதில் அவர்கள் கீழே விழுந்தனர்.
இதைத்தொடர்ந்து பின்னால் வந்த மற்றொரு தனியார் பஸ்சும் அவர்கள் மீது மோதியது. இதனால் அவர்கள் 2 பேரும் படுகா யம் அடைந்தனர்.
இதை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து, அந்த 2 ேபரையும் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோத னை செய்து அங்காத்தாள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர்.
டிரைவர்கள் மீது வழக்கு
படுகாயம் அடைந்த முனியப்பன் பொள்ளாச்சி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்த புகாரின் பேரில் கிணத்துக்கடவு போலீசார் பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர், பகவதிபாளையத்தை சேர்ந்த தனியார் பஸ் டிரைவர் சந்தோஷ்குமார் (30) மற்றும் மற்றொரு தனியார் பஸ் டிரைவரான திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே செல்லப்பம்பாளையத்தை சேர்ந்த செந்தில்குமார் (38) ஆகிய 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.