பஸ் மோதி பெண் சாவு

நெல்லையில் பஸ் மோதி பெண் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-06-04 18:47 GMT

நெல்லை:

நெல்லை அருகே கட்டுடையார் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சுடலை. இவருடைய மனைவி தங்கம்மாள் (வயது 70). இவர் நேற்று காலையில் வண்ணார்பேட்டை பஸ் நிறுத்தத்தில் பஸ்சில் இருந்து இறங்கி சாலையில் நடந்து சென்றார்.

அப்போது அந்த வழியாக வந்த மினி பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக தங்கம்மாள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து நெல்லை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்