மின்சாரம் தாக்கி பெண் பலி
ரிஷிவந்தியம் அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி கிணற்றில் விழுந்த ஆட்டை காப்பாற்ற முயன்றபோது பரிதாபம்;
ரிஷிவந்தியம்
ரிஷிவந்தியம் ஒன்றியம் மரூர் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மனைவி வெண்ணிலா(வயது 40). இவர் அதே கிராமத்தை சேர்ந்த புகழேந்தி என்பவரின் கிணறு அருகே ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது கிணற்றில் தவறி விழுந்த ஆட்டை மீட்பதற்காக அருகே சென்றபோது கிணற்று மோட்டாருக்கு வரும் மின் ஓயரை எதிர்பாராதவிதமாக வெண்ணிலா மிதித்தார். இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வாணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே வெண்ணிலா பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்டு்ரோடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.