மலையடிவாரத்தில் டிராக்டர் கவிழ்ந்து பெண் பலி
ராஜபாளையம் அருகே மலை அடிவாரத்தில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் பெண் பலியானார். மேலும் டிரைவர் உள்பட 11 ேபர் படுகாயம் அடைந்தனர்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே மலை அடிவாரத்தில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் பெண் பலியானார். மேலும் டிரைவர் உள்பட 11 ேபர் படுகாயம் அடைந்தனர்.
பெண் பலி
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூர் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் களை எடுக்கும் பணிக்காக தென்காசி மாவட்டம் தேவிபட்டினம் அருகே கீழூர் ராமசாமியாபுரம் கிராமத்தை சேர்ந்த 11 பேர் டிராக்டரில் சென்றனர். பணியை முடித்து விட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு வளைவில் திரும்பும் போது டிராக்டர் திடீரென கவிழ்ந்தது. இதில் தேவிபட்டினம் கீழூர் ராமசாமியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரம்மாள்(வயது 65) என்பவர் டிராக்டருக்கு அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் விருதுநகர் எரிச்சநத்தம் பகுதியை சேர்ந்த டிராக்டர் டிரைவர் சுந்தரமூர்த்தி(34) படுகாயங்களுடன் மீட்கப்பட்டார்.
படுகாயம்
மேலும் டிராக்டரில் பயணம் செய்த தேவிபட்டினம் கீழூர் ராமசாமியாபுரம் கிராமத்தை சேர்ந்த மரியபாக்கியம் (75), மரியசெல்வம் (56), ராஜலட்சுமி (51), கடல் மாதா(42), கோமதி(63), தங்கமலை (50), கிறிஸ்து மேரி (49), செல்வம்(52), ஜெயமேரி(47), முத்துமாரி(50) ஆகிய 10 பேரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.
இவர்களை சிவகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அனைவரும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து சேத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள்சாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.