மோட்டார் சைக்கிள் மோதி பெண் படுகாயம்

மோட்டார் சைக்கிள் மோதி பெண் படுகாயம்

Update: 2023-05-07 18:45 GMT

குளச்சல்:

குளச்சல் அருகே உள்ள கிழக்கு கல்லுக்கூட்டத்தை சேர்ந்தவர் ஜவான் சிசில். இவரது மனைவி மேரி தங்க ராணி (வயது62), ஓய்வு பெற்ற நர்சிங் சூப்பிரண்டு. இவர் சம்பவத்தன்று காய்கறி வாங்குவதற்காக கடைக்கு புறப்பட்டார். வீட்டு முன் உள்ள சாலையில் நடந்து கொண்டிருந்த போது அந்த வழியாக அருவிக்கரையை சேர்ந்த ஜோஸ்லின் (20) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மேரி தங்கராணி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அவரை அருகில் நின்றவர்கள் மீட்டு நாகர்கோவில் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஜோஸ்லின் மீது குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்