மோட்டார் சைக்கிள் மோதி பெண் படுகாயம்
நாசரேத்தில் மோட்டார் சைக்கிள் மோதி பெண் படுகாயம் அடைந்தார்.
நாசரேத்:
நாசரேத் கத்தீட்ரல் ரோடு பஸ் நிறுத்தம் அருகே பானி பூரி வியாபாரம் செய்து வருபவர் பூக்குமார் (வயது 40). இவரது மனைவி நித்தியா (36). சம்பவத்தன்று நித்தியா நாசரேத் காமராஜர் பஸ் நிலையம் அருகில் சாலையில் நடந்து சென்றார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக நித்தியா மீது மோதியது. இதில் அவர் கீழே படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் நாசரேத் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராய்ஸ்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.