அரசு பஸ் மோதி பெண் படுகாயம்

அரசு பஸ் மோதி பெண் படுகாயம்

Update: 2022-12-15 18:45 GMT

சிவகாசி,

சிவகாசி அருகே உள்ள மம்சாபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் லட்சுமியம்மாள் (வயது 70). இவர் வடமலாபுரம் சென்று விட்டு மம்சாபுரம் செல்வதற்காக சிவகாசி பஸ் நிலையம் வந்துள்ளார். அங்கு பஸ் ஏற நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த அரசு பஸ் மூதாட்டி லட்சுமியம்மாள் மீது மோதியதாக கூறப்படுகிறது.

இதில் மூதாட்டியின் கால்கள் நசுங்கியது. பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசார் பேர்நாயக்கன்பட்டியை சேர்ந்த முத்துராஜ்(33) என்பவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்