சமையல் செய்யும்போது தீப்பிடித்து பெண் காயம்
சமையல் செய்யும்போது தீப்பிடித்து பெண் காயம்;
சிவகாசி
சிவகாசி அருகே உள்ள மாரனேரி துரைச்சாமிபுரத்தை சேர்ந்தவர் சீனி வாசன் மனைவி கார்த்தீஸ்வரி (வயது 48). கூலி தொழிலாளியான இவர் நேற்று காலை வழக்கம்போல் வீட்டில் சமையல் செய்து கொண் டிருந்தார். அப்போது திடீரென கியாஸ் கசிவு ஏற்பட்டு தீ விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் கார்த்தீஸ்வரியின் கை, கால், வயிறு பகுதியில் தீக்காயம் ஏற்பட்டது. உடனே அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து மாரனேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.