கார் கவிழ்ந்ததில் காயம் அடைந்த பெண் சாவு

கார் கவிழ்ந்ததில் காயம் அடைந்த பெண் இறந்தார்.

Update: 2023-01-20 20:43 GMT

திசையன்விளை:

கோவை கணபதிபுரம் தரணி நகரை சேர்ந்தவர் முரளி (வயது 40). இவர் கடந்த டிசம்பர் மாதம் குடும்பத்துடன் கன்னியாகுமரியில் இருந்து திருச்செந்தூருக்கு காரில் சென்றுகொண்டிருந்தார். காரை முரளி ஓட்டி சென்றார். கார் நெல்லை மாவட்டம் உவரி அருகே உள்ள வல்லான்விளை அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் காரில் இருந்த அவரது மனைவி சங்கீதா (32), முரளி ஆகிய இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இருவரும் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்தநிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி சங்கீதா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்