காட்டுப்புத்தூரை அடுத்த மேலக்காரைக்காட்டைச் சேர்ந்தவர் பாலுச்சாமி. இவரது மனைவி மோகனா (வயது 54). இவர் சம்பவத்தன்று நாமக்கல்லில் உள்ள ஒரு கடையில் கட்டுமான பொருட்களை வாங்கி கொண்டு வேனில் வந்து கொண்டிருந்தார். வேன் காட்டுப்புத்தூர் அருகே மாராட்சிபட்டி மேடு அருகே வந்தபோது, வேனில் இருந்த குழாய்கள் சாலையில் கீழே விழுந்தன. இதனையடுத்து வேனை சாலையோரத்தில் நிறுத்தினர். அப்போது மோகனா அவைகளை எடுப்பதற்காக சென்றபோது, அந்த வழியாக சென்ற கார் அவர் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.