ஆறுகாணியில் சாராய ஊறல் வைத்திருந்த பெண் கைது

ஆறுகாணியில் சாராய ஊறல் வைத்திருந்த பெண் கைது ெசய்யப்பட்டார்.

Update: 2023-08-25 17:33 GMT

அருமனை:

அருமனை அருகே உள்ள ஆறுகாணி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அவர்கள் ஆறுகாணி மேல மண்ணடி பகுதியில் வந்த போது ஒரு பெண் குடத்துடன் வந்து கொண்டிருந்தார். போலீசாரை பார்த்ததும் அவர் குடத்தை கீழே இறக்கி வைத்து விட்டு தப்பி ஓட முயன்றார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்தப் பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் ஆறுகாணி மேலமண்ணடியை சேர்ந்த பவானி (வயது64) என்பதும், குடத்தில் சாராய ஊறல் ைவத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த சாராய ஊறலை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட பவானி பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

--

Tags:    

மேலும் செய்திகள்