தூக்குப்போட்டு பெண் சாவு

திருவாடானை அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-05-18 18:45 GMT

தொண்டி, 

திருவாடானை தாலுகா தீர்த்தாண்டதானம் கிராமத்தைச் சேர்ந்தவர் தூய மணி. மீனவர் கூட்டுறவு சங்கத்தலைவர் ஆவார். இவரது மகள் தனலெட்சுமி (வயது 28). இவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்த தகவலின் அடிப்படையில் எஸ்.பி. பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்