பணத்தை நேர்மை தவறாமல் வங்கியில் ஒப்படைத்த பெண்

திருவாரூரில் வங்கியில் இருந்து கூடுதலாக கொடுத்த பணத்தை நேர்மை தவறாமல் வங்கியில் ஒப்படைத்த பெண்ணுக்கு பாராட்டு குவிகிறது.;

Update: 2022-10-12 18:45 GMT

திருவாரூர்;

திருவாரூரில் வங்கியில் இருந்து கூடுதலாக கொடுத்த பணத்தை நேர்மை தவறாமல் வங்கியில் ஒப்படைத்த பெண்ணுக்கு பாராட்டு குவிகிறது.

வங்கியில் பணம் எடுத்தார்

திருவாரூர் வண்டிக்கார தெருவில் வசித்து வருபவர் கார்த்திக். இவருடைய மனைவி மகேஸ்வரி. கார்த்திக் வீடுகளுக்கு டைல்ஸ் பதிக்கும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மகேஷ்வரி தனது வங்கி கணக்கில் பணம் எடுப்பதற்காக வண்டிக்கார தெருவில் உள்ள ஒரு வங்கியின் கிளைக்கு சென்றார். அங்கு அவர் தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.11 ஆயிரம் பணத்தை எடுத்துள்ளார்.அதனை தனது வங்கி கணக்கு புத்தகத்தில் பதிவு செய்துவிட்டு வீடு திரும்பி உள்ளார். வீட்டுக்கு வந்து பணத்தை எண்ணி பார்த்த போது போது ரூ.22 ஆயிரம் இருந்தது. ஆனால் வங்கி கணக்கு புத்தகத்தில் ரூ.11 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டதாக அச்சிடப்பட்டிருந்தது.

கூட்டம் அதிகம்

இதைத்தொடர்ந்து மகேஸ்வரி தனது கணவர் கார்த்திக் மற்றும் அந்த பகுதி வார்டு கவுன்சிலர் ரஜினி சின்னா உதவியுடன் சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று மேலாளரிடம் தகவல் தெரிவித்தனர்.உடனே வங்கி மேலாளர் காசாளரை அழைத்து இது குறித்து கேட்டார். அப்போது காசாளர், வங்கியில் சற்று கூட்டம் அதிகமாக இருந்ததால் கவனக்குறைவாக பணத்தை கூடுதலாக மகேஸ்வாியிடம் கொடுத்தது தெரியவந்தது.

பாராட்டு

மேலும் காசாளர் தான் கூடுதலாக கொடுத்த பணத்துக்கு ஈடாக தனது சொந்த பணத்தை வங்கியில் செலுத்தியதும் தரியவந்தது.இதைத்தொடர்ந்து மகேஸ்வரி ரூ.11 ஆயிரத்தை காசாளரிடம் கொடுத்தார். பணத்தை பெற்றுக் கொண்ட காசாளர் மகேஸ்வரிக்கு நன்றி தெரிவித்தார்.ஏழ்மையிலும் நேர்மையாக நடந்து கொண்ட மகேஸ்வரிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்