உசிலம்பட்டி அருகே வீட்டில் காயங்களுடன் இறந்து கிடந்த பெண் -போலீசார் விசாரணை

உசிலம்பட்டி அருகே வீட்டில் காயங்களுடன் மர்மமான முறையில் பெண் இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-02-13 21:04 GMT

உசிலம்பட்டி

உசிலம்பட்டி அருகே வீட்டில் காயங்களுடன் மர்மமான முறையில் பெண் இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்து கிடந்தார்

உசிலம்பட்டி அருகே உள்ள உத்தப்பநாயக்கணூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சாமி. இவரது மனைவி செல்லம்மாள் (வயது 65). இவரது கணவர் 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருடைய மகன், மகளும் திருமணம் முடிந்து வெளியூர்களில் வசித்து வருகின்றனர். உசிலம்பட்டி-வத்தலக்குண்டு நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள தோட்டத்து வீட்டில் தனியாக செல்லம்மாள் வசித்து வந்தார். இந்தநிலையில் செல்லம்மாள். இரவு வழக்கம் போல் உறங்க சென்றவர் நேற்று காலை முதலே வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது கழுத்து, முகம் உள்ளிட்ட பகுதிகளில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

விசாரணை

இதையடுத்து உசிலம்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லு, இன்ஸ்பெக்டர் கண்ணாத்தாள் மற்றும் போலீசார் செல்லம்மாள் உடலை கைப்பற்றி உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் செல்லம்மாள் இறப்பிற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்