காவிரி ஆற்றில் பிணமாக கிடந்த பெண்

காவிரி ஆற்றில் பெண் ஒருவர் பிணமாக கிடந்தார்.

Update: 2023-01-14 17:22 GMT

முசிறி அருகே சந்தைப்பாளையம் காவிரிக்கரையில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனே இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக்குக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர் இதுகுறித்து முசிறி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின்னர் அவர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்.

==========

Tags:    

மேலும் செய்திகள்