கிணற்றில் தவறி விழுந்து பெண் சாவு

கிணற்றில் தவறி விழுந்து பெண் பலியானார்.

Update: 2022-08-17 18:49 GMT

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெண்பாவூரை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மனைவி பாப்பாத்தி (வயது 45). இவர் நேற்று தனது வயலில் வேலைபார்த்து கொண்டிருந்தார். அப்போது வயலில் உள்ள கிணற்றின் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்து இறந்தார். இந்தநிலையில் வெகு நேரமாகியும் பாப்பாத்தி வீட்டிற்கு வராததால் அவரது உறவினர்கள் வயலுக்கு சென்றுள்ளனர். அப்போது பாப்பாத்தி கிணற்றில் பிணமாக மிதந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரது உடலை மீட்டு கை.களத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்