வைகை ஆற்றில் மூழ்கி பெண் சாவு
மானாமதுரையில் வைகை ஆற்றில் மூழ்கி பெண் பரிதாபமாக இறந்தார்.
மானாமதுரை,
மானாமதுரை வேதியரேந்தல் அருகே உள்ள செங்கோட்டையைச் சேர்ந்தவர் சேதுராமலிங்கம். இவருடைய மனைவி மகேஸ்வரி (வயது 37). இவர் செங்கோட்டை வைகையாற்றுப் பகுதியில் குளிக்க சென்றார். அங்கு தேங்கி இருந்த தண்ணீரில் மூழ்கி அவர் பலியானார். இது குறித்து மானாமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.