கோவில் குளத்தில் மூழ்கி பெண் பலி

கோவில் குளத்தில் மூழ்கி பெண் பலியானார்.

Update: 2023-02-04 19:38 GMT

லால்குடியை அடுத்த பெருவளநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவரது மனைவி ஈஸ்வரி (வயது45). இவருக்கு அம்மை போட்டிருந்ததால் லால்குடி அருகே உள்ள கீழ் அன்பில் மாரியம்மன் கோவிலில் சில தினங்களாக தங்கியிருந்தார். இந்நிலையில் ஈஸ்வரி நேற்று காலையில் கோவில் குளத்தில் குளித்ததாக கூறப்படுகிறது. அப்போது அவருக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த லால்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஈஸ்வரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அம்மை குணமாக கோவிலில் தங்கி இருந்த பெண் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்