பாம்பு கடித்து பெண் சாவு

பாம்பு கடித்து பெண் ,இறந்தார்.

Update: 2023-05-15 18:58 GMT

கீரனூரை அடுத்துள்ள உடையாளிப்பட்டியை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி மணிமேகலை (வயது 36). தொழிலாளியான இவர், தென்னந்தோப்பில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது மணிமேகலையை பாம்பு கடித்தது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மணிமேகலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து உடையாளிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாயழகு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்