மின்சாரம் தாக்கி பெண் சாவு

மின்சாரம் தாக்கி பெண் சாவு

Update: 2022-09-03 19:07 GMT

அலங்காநல்லூர்,

மதுரை பாலமேடு அருகே உள்ள ராஜக்காள்பட்டியை சேர்ந்தவர் சர்க்கரைராஜ். இவரது மனைவி பிரபா (வயது 50). இவர் அருகில் இருந்த கொய்யா தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். அங்கு மின்சார சுவிட்சை போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பிரபா மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் தொடர்பாக பாலமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன், சப்- இன்ஸ்பெக்டர் சரசுவதி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்