ஆலங்குடியில் பெண் மர்ம சாவு

ஆலங்குடியில் பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-06-16 18:29 GMT

கடும் துர்நாற்றம்

கறம்பக்குடி அருகே உள்ள நரங்கியப்பட்டு வடக்கு தெருவை சேர்ந்தவர் யோகேஸ்வரன். இவரது மனைவி லலிதா (வயது 55). இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்தநிலையில் யோகேஸ்வரன் தனது மனைவியை விவாகரத்து பெற்று தனியாக வசித்து வருகிறார். லலிதா ஆலங்குடி கே.வி.எஸ். தெருவில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வீட்டு வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் லலிதா வீட்டில் இருந்து ேநற்று கடும் துர்நாற்றம் வீசியது. இதனால் அப்பகுதி மக்கள் போலீசில் புகார் தெரிவித்தனர்.

மர்மசாவு

இதன்பேரில் ஆலங்குடி இன்ஸ்பெக்டர் அழகம்மை தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது லலிதா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மேலும் அவரது உடல் அழுகிய நிலையில் கிடந்தது. இதனால் அவர் இறந்து 3 நாட்களுக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து ஆலங்குடி சப்-இன்ஸ்பெக்டர் நதியா வழக்குப்பதிவு செய்து லலிதாவை யாரேனும் கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்