விபத்தில் பெண் சாவு

விருதுநகர் அருகே விபத்தில் பெண் பலியானார்.

Update: 2023-03-28 19:39 GMT


விருதுநகர்-சாத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் வெங்கடாசலபுரம் பாலத்தின் அருகே 45 வயது மதிக்கத்தக்க பெண் வாகன விபத்தில் சிக்கி இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. மோதிய வாகனம் பற்றியும் தகவல் இல்லை. இது பற்றி இ. முத்துலிங்கபுரம் கிராம நிர்வாக அதிகாரி மணிமேகலா கொடுத்த புகாரின் பேரில் வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்