மேலூர் அருகே மின்னல் தாக்கி பெண் சாவு

மேலூர் அருகே மின்னல் தாக்கி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2023-09-22 20:15 GMT

மேலூர்,

மேலூர் அருகே அழகர்மலை அடிவார பகுதியில் உள்ள சாம்பிராணிபட்டி கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் மனைவி பூமா (வயது 35), வேலு என்பவரது மனைவி லட்சுமி (40). இவர்கள் இருவரும் நேற்று மாலை மலை அடிவாரத்தில் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தனர். அப்போது பலத்த மழை பெய்தது. அந்த நேரத்தில் மின்னல் தாக்கி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே பூமா இறந்தார். 3 ஆடுகளும் இறந்தன. லட்சுமி படுகாயமடைந்து மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்