தனியார் மருத்துவமனையில் தைராய்டு அறுவை சிகிச்சை செய்த பெண் உயிரிழப்பு - போலீசார் விசாரணை

திருப்பத்தூரில் அறுவை சிகிச்சை செய்த பெண் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

Update: 2024-05-18 17:23 GMT

கோப்புப்படம் 

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த மோட்டூர் கிராமத்தை சேர்ந்த வேண்டாமாள், தைராய்டு நோய்காக ஆம்பூர் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். திடீரென உடல்நிலை மோசமானதால் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். அவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் அளித்தனர். இதையடுத்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.Full View

Tags:    

மேலும் செய்திகள்