திருத்தணி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலி

திருத்தணி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலியானார்.

Update: 2022-11-05 04:24 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த இஸ்லாம் நகர் கிராமத்தை சேர்ந்தவர் பக்சுசாய்பு மனைவி சர்தார்பீ (வயது 44). கடந்த புதன்கிழமை இவர் தனது மகன் முகமத் உடன் மோட்டார் சைக்கிளில் நெட்டேரி கண்டிகை அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றபோது, ரோட்டின் குறுக்கே மாடு திடீரென வந்துள்ளது. இதனால் முகமத் தனது மோட்டார் சைக்கிளில் பிரேக் போட்டதில் பின்பக்க இருக்கையில் இருந்த சர்தார்பீ நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். காயம் அடைந்தவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சர்தார்பீ சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்