மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு
குலசேகரம்:
குலசேகரம் அருகே மண்விளையைச் சேர்ந்த தேவசகாயம் மனைவி ராணி (வயது 53). இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது.
அயக்கோடு ஊராட்சியில் ராணி 100 நாள் வேலைக்குச் சென்று வந்தார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது இளைய மருமகன் ஓட்டிய மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்தபடி ராணி சென்றார். அப்போது கல்லடிமாமூடு அருகில் சென்ற போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார். பின்னர் அவர் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.