தண்ணீர் என நினைத்து டீசலை குடித்த பெண் சாவு
சங்கராபுரத்தில் தண்ணீர் என நினைத்து டீசலை குடித்த பெண் பரிதாபமாக இறந்தார்.;
சங்கராபுரம்
சங்கராபுரம் காலனியை சேர்ந்த அய்யாகண்ணு மனைவி இருசாயி(வயது 70) இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் இருசாயி சங்கராபுரம் பூட்டை சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகில் பாட்டிலில் இருந்த டீசலை தண்ணீர் என நினைத்து குடித்தார். இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். முதல் உதவி சிகிச்சைக்கு பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.