ரெயில் மோதி பெண் பலி

நெல்லை அருகே ரெயில் மோதி பெண் பலியானார்.

Update: 2022-10-16 18:51 GMT

நெல்லை அருகே உள்ள கங்கைகொண்டான் அடுத்த ஆலடிப்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மனைவி எமிலி ரத்னாபாய் (வயது 52). செல்வராஜ் இறந்த பிறகு, எமிலி ரத்னாபாய் உறவினர் வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை எமிலி ரத்னாபாய் அங்குள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்தார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் மோதி எமிலி ரத்னாபாய் பலியானார்.

இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை சந்திப்பு ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்