அரியலூர் அருகே அல்லி நகரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்லம் (வயது 50). இவர் பாட்டில்களை சேகரித்து பழைய இரும்பு கடையில் விற்பனை செய்து வந்தார். இந்தநிலையில் அரியலூர் ரெயில்வே மேம்பாலம் அருகே கிடந்த மதுபாட்டில்களை சேகரித்து கொண்டு இருந்தபோது அந்த வழியாக சென்ற ரெயில் மோதி செல்லம் உடல் சிதறி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து அரியலூர் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.